மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

விவசாயிகள் போராட்டம்: சுங்கக்கட்டண இழப்பு ரூ.815 கோடி!

விவசாயிகள் போராட்டம்:   சுங்கக்கட்டண இழப்பு ரூ.815 கோடி!

டெல்லி விவசாயிகள் போராட்டம் காரணமாக மூன்று மாநிலங்களில் 815 கோடி ரூபாய் சுங்கக்கட்டண இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 118 நாட்களாக ஹரியானா, உத்தரப்பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களின் மூலம் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்பது குற்றச்சாட்டாகும். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் காரணமாக மூன்று மாநிலங்களில் 815 கோடி ரூபாய் சுங்கக்கட்டண இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பரில் இருந்து மார்ச் மாதம் வரை இந்தச் சுங்கக்கட்டண இழப்பு ஏற்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர், "நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டம் செய்வதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் அதிகமாக 487 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் 326 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 1 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயப் போராட்டம் காரணமாக வேறு மாநிலங்களில் இழப்பு ஏற்படவில்லை. சுங்க வருவாய் இல்லாமல் இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் சாலை போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

புதன் 24 மா 2021