மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

20 குழந்தைகள் பெற்றால்...: சர்ச்சையில் உத்தரகாண்ட் முதல்வர்!

20 குழந்தைகள் பெற்றால்...:  சர்ச்சையில்  உத்தரகாண்ட் முதல்வர்!

‘20 குழந்தைகள் பெத்துகிட்டா, ரேஷனில் அதிக பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்’ என உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாகப் பதவியேற்ற உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். நேற்று முன்தினம் (மார்ச் 22) நைனிடாலில் உள்ள ராம் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் ராவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய ராவத், “இந்த கொரோனா ஊரடங்கில் 10 குழந்தைகளைக் கொண்டவர்களுக்கு 50 கிலோவும், 20 குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு 100 கிலோவும், இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு 10 கிலோவும் ரேஷன் பொருட்கள் கிடைத்தது. இப்போது, குறைந்த குழந்தைகளைக் கொண்டவர்கள் பொறாமைப்படுகிறார்கள். இதற்கு யார் காரணம்? நேரம் இருந்தபோது, நீங்கள் இரண்டு குழந்தைகளை மற்றும் பெற்றெடுத்தீர்கள். ஏன் 20 குழந்தைகளைப் பெற்றெடுக்கவில்லை?” என்று மக்கள் திகைக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

மேலும், "சர்வதேச அளவில் சுகாதாரத்துறையில் முன்னிலை வகிக்கும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு 50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கடினமான சூழலில், மோடியைத் தவிர்த்து வேறு யார் பிரதமராக இருந்தாலும் நிலைமை இன்னும் மோசமாக மாறியிருக்கும். கொரோனாவை இந்திய அரசு திறமையாகக் கையாண்டு வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆட்சி புரிந்த அமெரிக்கா, கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது திணறி வருகிறது” என்று கூறினார்.

இந்தியாவில், 1858ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் அரசு ஆட்சி நடத்திய நிலையில் 'இந்தியாவை அமெரிக்கா ஆட்சி செய்தது' என்று அவர் பேசியதும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர், பெண்கள் கிழிந்த ஜீன்ஸ்கள் அணிவது குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “முழங்கால்களைக் காண்பிப்பது, கிழிந்த டெனிம் அணிந்து பணக்கார குழந்தைகளைப்போல தோற்றமளிப்பது, இதெல்லாம் எங்கிருந்து தொடங்குகிறது? வீட்டிலிருந்துதானே... ஆசிரியர்கள் அல்லது பள்ளிகளின் தவறு என்ன? முழங்கால்களைக் காட்டும் ஜீன்ஸ் அணியும் என் மகனை நான் எவ்வழியில் அழைத்துச் செல்கிறேன். பெண்களும் குறையில்லாமல் தங்களின் முழங்கால்களைக் காட்டுகிறார்கள். இது நல்லதா? மேற்கத்திய உலகம் நமது பாரம்பர்யத்தைப் பின்பற்றி, மூடிமறைக்கும் போது, இந்தியர்கள் நிர்வாணத்தை நோக்கி ஓடுகிறார்கள்” என்று பேசி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

புதன் 24 மா 2021