மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

ரயில்களில் இரவில் செல்போன் சார்ஜ் செய்ய தடை!

ரயில்களில் இரவில் செல்போன் சார்ஜ் செய்ய தடை!

சமீபத்தில் டெல்லியில் இருந்து டேராடூன் நோக்கி சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. மின் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையொட்டி ரயில்களில் தீ விபத்தைத் தடுக்க இரவில் செல்போன் சார்ஜ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இரவு நேரங்களில் பயணிகள் செல்போன் மற்றும் லேப்டாப்புகளை சார்ஜில் போட்டுவிட்டு தூங்கி விடுகின்றனர். இவை சூடாகி தீ விபத்துகள் ஏற்படுகின்றன. இதையடுத்து ரயில் பெட்டிகளில் இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன், லேப்டாப் போன்றவை சார்ஜ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் சார்ஜிங் பாயின்டுகளை ஆஃப் செய்ய அந்தந்த பெட்டிகளில் உள்ள மெக்கானிக் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும், முறையாக அமல்படுத்தப்படவில்லை.

தற்போது இந்த உத்தரவை சரிவர பின்பற்ற வேண்டும் என ரயில்வே மீண்டும் தெரிவித்துள்ளது. மேலும் இதைக் கண்காணிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ரயில் நிலையங்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 24 மா 2021