மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

விதிமீறல் புகாரில் கரூர் முதலிடம்: தேர்தல் அதிகாரி

விதிமீறல் புகாரில் கரூர் முதலிடம்: தேர்தல் அதிகாரி

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக கரூரில்தான் அதிகமான புகார்கள் வந்துள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிற வேளையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளையும், விதிமீறல்கள் குறித்தும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்நிலையில்,தலைமை செயலகத்தில் இன்று(மார்ச் 24) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தேர்தல் தொடர்பாக சிவிஜில் ஆப் மூலம் பெறப்பட்ட 2,313 புகார்களில், 1,607 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கரூர், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இருந்தே அதிகமான புகார்கள் வருகின்றன.

கரூர் மாவட்டத்தில் இருந்து 487 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 440 புகார்கள் உண்மைத்தன்மை கொண்டவை என கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நட்சத்திர வேட்பாளர்கள் அதிகமுள்ள கோவையில் 365 புகார்களில், 284 புகார்கள் மீதும், திருப்பூர் மாவட்டம் 131 புகார்களில். 101 புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 130 புகார்களில் 118 புகார்கள் மீதும், கன்னியாகுமரியில் 127 புகார்களில் 47 புகார்களும் உறுதி செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஓய்வு பெற்ற காவலர்கள், ராணுவ வீரர்களை பயன்படுத்தி கொள்ள காவல் துறை அனுமதி கோரியுள்ளது. தேர்தல் பணியில் 4.5 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .

ஏற்கனவே தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, தமிழகத்துக்கு 65 கம்பெனி துணை ராணுவ படையினர் வந்துள்ள நிலையில், வரும் மார்ச் 28 ஆம் தேதி மேலும் 235 கம்பெனி துணை ராணுவப்படையினர் வரவுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை ரூ.265 கோடி மதிப்பிலான பணம், நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்த 80 வயதுக்கு மேற்பட்ட 1,51,830 பேரும், மாற்றுத்திறனாளிகள் 45,568 பேரும் விண்ணப்பித்துள்ளனர்” என தெரிவித்தார்.

வீடுகளுக்கே சென்று பெறப்படும் தபால் வாக்கு

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் வீட்டுக்கே சென்று தபால் வாக்குகளை பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 7300 பேர் தபால் வாக்கு அளிக்கவுள்ளனர். இதற்காக 16 தொகுதிகளுக்கும் 70 குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 31ஆம் தேதி வரை வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்படும். ஒரு நாளில் குழுவொன்று 15 பேரிடம் தபால் வாக்குகளை பெறும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

புதன் 24 மா 2021