மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், சட்டமன்ற தேர்தலையொட்டி, ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு எண்ணப்படும் நாளான மே 2ஆம் தேதியன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் சுமூகமாகவும், அமைதியாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

புதன் 24 மா 2021