மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

24 நாட்களுக்குப் பின் குறைந்த பெட்ரோல்,டீசல் விலை!

24 நாட்களுக்குப் பின் குறைந்த பெட்ரோல்,டீசல் விலை!

இந்தியாவில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் 24 நாட்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 16பைசா குறைந்துள்ளது.

தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இதில், தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமான பிரச்சினையாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்துப் பேசப்படுகிறது.

இந்தியாவில் பிஜேபி ஆட்சிக்கு வந்தபின், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை, இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக, பெட்ரோல், டீசல் தேவை, சர்வதேச அளவில் குறைந்தது. இதையடுத்து, கச்சா எண்ணெய் வினியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள, உற்பத்தி நாடுகள் ஒப்பந்தம் போட்டன. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு,

கடந்த மாதம், 27ஆம் தேதி, சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு, 93.11 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு, 86.45 ரூபாயாகவும் விற்பனையானது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 நாட்களாக விலை மாற்றமின்றி தொடர்ந்த பெட்ரோல், டீசல் விலை இன்று குறைக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல், லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து, 92.95 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து 86.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் கூறப்படுகிறது. கடந்த இருவாரங்களில் உலகளவில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய் 70 டாலர்களிலிருந்து 63.98 டாலராகக் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்கள் நினைத்தால் குடிமக்களுக்கு விலையைக் குறைத்து அளிக்க முடியும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சூசகமாகக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

-சக்தி பரமசிவன்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 24 மா 2021