மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி?

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி?

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி என்.வி.ரமணாவை நியமிக்கலாம் என தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பரிந்துரை செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவின் பதவிக்காலம் ஏப்ரல் 23 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர், தாம் ஓய்வு பெறும் ஒரு மாதத்திற்கு முன்பு அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைப்பது வழக்கம். இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதி குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,” உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதி என்.வி.ரமணா உள்ளார். இவரின் பதவிக்காலம் 2022, ஆகஸ்ட் 26 வரை உள்ளது என தெரிவித்துள்ளார்.

யார் இந்த என்.வி.ரமணா?

ஆந்திராவில் 1957, ஆகஸ்ட் 27 ஆம் தேதி பிறந்த என்.வி.ரமணா விவசாய குடும்ப பின்னணியைக் கொண்டவர். கடந்த 2000 ஆம் ஆண்டு ஆந்திரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

2013, செப்டம்பர் 2ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இதையடுத்து, 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

ஜம்மு-காஷ்மீரில் இணையத்தை முடக்கி வைப்பது குறித்து உடனடியாக மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த அமர்வில் இருந்த நீதிபதிகளுள் ஒருவர் என்.வி.ரமணா.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் வரும் என்ற தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுள் ஒருவர்.

இவர்,தற்போதைய நல்சாவின் தலைவராக உள்ளார்.

இந்த பரிந்துரை ஏற்கபட்டால், உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இருப்பார். 16 மாதங்களுக்கு மேல் பதவி வகிப்பார்.

வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

புதன் 24 மா 2021