மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

ஜாக்கிரதை: கொரோனா இரண்டாவது அலை!

ஜாக்கிரதை: கொரோனா இரண்டாவது அலை!

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை உருவாகியுள்ளது என தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை அவினாசி சாலையில் உள்ள சென்ட்ரல் வங்கி கிளையில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து, அவினாசி சென்ட்ரல் வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது. தஞ்சையில் மாணவர்களிடையே பரவும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை உருவாகியுள்ளது. அதனால், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. மேலும், தமிழகத்திற்கு கூடுதலாக 10 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்துள்ளது.

திருப்பதி

திருப்பதியில் , கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை திருப்பதி சுவாமி புஷ்கரணி தெப்பக்குளத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக திருமலையில் கடுமையான கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமலை திருப்பதியில் தெப்ப உற்சவத்தில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து நேற்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

உள்ளரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 600 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். நிலையான வழிமுறைகளை பின்பற்றாமல் கூட்டங்கள் நடைபெற்றால், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள், உள்ளரங்கு உரிமையாளர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டங்களுக்கு வரும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துபவர்கள் உறுதி செய்யவேண்டும். இதனை அக்கூட்டத்திற்கு அனுமதி, பாதுகாப்பு அளிக்கும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்

பேருந்துகள் மற்றும் பொதுப்போக்குவரத்துகளில் பயணம் செய்வோர் முகக்கவசம் அணிந்திருப்பதை போக்குவரத்து அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணிக்கவேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள், தொழிற்சாலைகள், கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் போன்ற பகுதிகளில் நோய்த் தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் .

கொரோனா அதிகரித்து வரும் நிலையில் கொரோனா விதி மீறல்கள் காணப்பட்டால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு 1.2 லட்சத்திற்கு குறையாமல் தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனா விதியை மீறியதற்காக மார்ச் 16ஆம் தேதி முதல் இதுவரை 45 ஆயிரத்து 250 பேருக்கு 97.80 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 24 மா 2021