மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

ஒருத்தருக்கு இத்தனை ஓட்டர் ஐடிகளா?: அதிகாரி மீது நடவடிக்கை!

ஒருத்தருக்கு இத்தனை ஓட்டர் ஐடிகளா?: அதிகாரி மீது நடவடிக்கை!

கேரளாவில் போலி வாக்காளர்கள் இருந்தது உண்மைதான் என்று அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

கேரள தலைமை தேர்தல் அதிகாரி டீகா ராம் மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,74,46,039 ஆக உயர்ந்துள்ளது.  துணை வாக்காளர் பட்டியலில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர்களின் பட்டியலை வெளியிட்ட பின்னர் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து 7,40,486 புதிய வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

25,956 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இந்த பட்டியலில் 2790 என்.ஆர்.ஐ வாக்காளர்களும், 69 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர்.

 மேலும், 4,00,444 பேர் அஞ்சல் வாக்கு மூலம் தங்கள் வாக்குகளை செலுத்துவார்கள். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட் -19 நோயாளிகள் அஞ்சல் வாக்கு மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8,85,504 விண்ணப்பதாரர்களில், 4,00,444 பேர் அஞ்சல் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.

கேரளாவில் வாக்களிப்பதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பைக் பேரணிகள் தடை செய்யப்பட்டுள்ளன.  சி-விஜில் ஆப் மூலம் பெறப்பட்ட 67,356 புகார்களில் 66,000 உண்மையானவை என கண்டறியப்பட்டுள்ளது.

 

புகார்களின் அடிப்படையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கான நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கை இந்த முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.  தேசிய கட்சிகள் 30 பேர்  வரையும், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 15 பேர் வரையும் வைத்து கொள்ளலாம்.

 தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த முடியாது. தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் நீதிமன்றம் இந்த விஷயத்தில் குறுக்கிடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாக்காளர் பட்டியலில் மோசடி மற்றும் முறைகேடுகள்

 

கேரளாவில் வாக்காளர் பட்டியலில் மோசடி மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதை தலைமைத் தேர்தல் அதிகாரி டீகா ராம் மீனா உறுதிப்படுத்தினார்.

 கேரளாவில் வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் மோசடி மற்றும் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தது.  இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில் மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.  ஒரே தொகுதியின் வாக்காளர் பட்டியலில் ஒரு நபரின் பெயர் ஐந்து அல்லது ஆறு முறை சேர்க்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதனால், கேரள தலைமை தேர்தல் அதிகாரி இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி மார்ச் 20க்குள் அறிக்கை அனுப்ப கோரியிருந்தார்.

 இந்நிலையில், தலைமைதேர்தல் அதிகாரி இப்பிரச்சினை குறித்து தெரிவித்ததாவது, “கேரளாவில் வாக்காளர் பட்டியலில்  போலி வாக்காளர்கள்  சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் தலைவர்களிடமிருந்து ஒரு சில புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடத்திய  முதற்கட்ட விசாரணையில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

 வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை இணைத்துவிடுவது  ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. ஏனென்றால் தொகுதி நிலை அதிகாரிகள் (பி.எல்.ஓக்கள்) பல இடங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதில்லை. காசர்கோட்டில் குமாரி என்ற பெயரில் 5 வாக்காளர் அட்டை வழங்கப்பட்டது. நான்கு அட்டைகள் அழிக்கப்பட்டன  இதற்கு பொறுப்பான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க கட்சிகள் வாக்குச்சாவடிகளில்  தேர்தல் முகவர்களை நியமிக்க வேண்டும்.  போலி வாக்காளர்களை அடையாளம் காண அனைத்து தொகுதிகளிலும் முறையான விசாரணை நடத்தப்படும். இந்த வகையான பிரச்சினைகளை அரசு நீண்ட காலமாக அனுபவித்து வருகிறது.  அரசியல் கட்சிகள் முறைகேடுகளை சரியான நேரத்திற்கு வெளியே கொண்டு வருவதில்லை.  அனைத்து அரசியல் கட்சிகளும் தூக்க நிலையில் உள்ளன இப்போதுதான் எழுந்திருக்கின்றன” என்றார்.

 

-சக்தி பரமசிவன்

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்! ...

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்!

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ! ...

6 நிமிட வாசிப்பு

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ!

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

4 நிமிட வாசிப்பு

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

புதன் 24 மா 2021