மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள்!

தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள்!

பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்று வாக்களிக்க ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 5ஆம் தேதிவரை 5 நாட்களுக்கு சென்னையில் இருந்து தினசரி 3,090 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தேர்தல் முடிந்த பிறகு, சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக ஏப்ரல் 6ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதி வரை தினசரி இயக்கப்படுகின்ற 2,225 பேருந்துகளுடன் 2,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர் மற்றும் கோவைக்கும், சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கும் என 1,738 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் மொத்தம் 14,215 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

இந்த பேருந்துகளில் செல்வதற்கு www.tnstc.in மற்றும் tnstc offcial app ஆகியவற்றின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பண்டிகை நாட்களில் இயக்கப்படுவதுபோல சென்னையில் 5 இடங்களில் இருந்து இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோயம்பேடு, மாதவரம், கேகே நகர், பூந்தமல்லி தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி விடுமுறை, ஏப்ரல் 3, 4 சனி ஞாயிறு விடுமுறை. ஏப்ரல் 6ஆம் தேதியும் பொது விடுமுறை. இடையில் ஐந்தாம் தேதி மட்டுமே வேலை நாளாக உள்ளது. இதனால், அந்த ஒரு நாள் விடுமுறை எடுத்து கொண்டால், 5 நாட்கள் மொத்தமாக விடுமுறை கிடைப்பதால் பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 24 மா 2021