மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

கொரோனா விதிமுறைகளை மீறினால்... : நீதிமன்றம் எச்சரிக்கை!

கொரோனா விதிமுறைகளை மீறினால்... : நீதிமன்றம் எச்சரிக்கை!

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ”உலகையை அச்சுறுத்தி வருகிற கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், கொரோனா தொற்று குறையவில்லை.

அதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும், ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று(மார்ச் 23) நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, கொரோனா பரவல் கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. இதை மீறுவோர் மீது பேரிடர் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அதனால், கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதித்து சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.

வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

புதன் 24 மா 2021