மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க உத்தரவு!

கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க உத்தரவு!

அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுதும் வகையில் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என தேசிய தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், 2021-22ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 23 முதல் மார்ச் 15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. நாடு முழுவதும் 255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டில் 28 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், விண்ணப்பங்கள் பெறத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டதாகக் கூறி இந்தத் தேர்வு மையங்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவங்களிலிருந்து நீக்கப்பட்டன. ஆன்லைனில் தேர்வு மையங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க உத்தரவிடக் கோரியும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை இன்று(மார்ச் 23) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் நகரங்களில் தேர்வு மையங்கள் இல்லாவிட்டால், மற்றவை என்று குறிப்பிட்டால் போதும். பின்னர் அதனைப் பரிசீலித்து மாணவர்களின் மாநிலத்துக்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்வு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், இந்தாண்டு கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க உத்தரவிட்டால், அது குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால், அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே தேர்வு எழுதும் வகையில் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டனர்.

தமிழகம் மட்டுமல்ல, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும் சொந்த மாநிலங்களிலேயே தேர்வு எழுதும் வகையில் கூடுதல் மையங்கள் அமைக்கவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர் நீதிபதிகள்.

வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

செவ்வாய் 23 மா 2021