மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

45வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி!

45வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் முதல் கட்டமாக மருத்துவர்கள் உள்பட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து, மார்ச் 1 ஆம் தேதி முதல் 45-வயதுக்கு மேல் இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் 60-வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று(மார்ச் 23) மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்தபின் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாடு முழுவதும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் இணை நோயாளிகளுக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. நேற்றைய நிலவரப்படி, இதுவரை நான்கு கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 594 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவரும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாம் டோஸை நான்காவது வாரம் முதல் எட்டாவது வாரத்திற்கான இடைப்பட்ட காலத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விரைவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான சக்தியை தரும் என்று தெரிவித்தார்.

வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

செவ்வாய் 23 மா 2021