மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

வட்டியை தள்ளுபடி செய்ய மறுப்பு!

வட்டியை  தள்ளுபடி செய்ய மறுப்பு!

கொரோனா காலத்தில், கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தனிநபர் முதல் நிறுவனங்கள் வரை பொருளாதார நெருக்கடியாலும், நிதி சுமையாலும் மிகவும் பாதிப்படைந்தன. அதனால், கொரோனா காலத்தில் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்துவதற்கு 2020 ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு கால அவகாசம் அளித்திருந்தது.

சில வங்கிகள் தவணை செலுத்தாத காலத்தில் வட்டிக்கு வட்டி விதித்தன. இந்நிலையில், கடன்களுக்கான தவணையை செலுத்துவதற்காக கால அவகாசத்தை நீட்டிக்க கோரியும் கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை இன்று(மார்ச் 23) நீதிபதிகள் அசோக்பூ‌ஷன், சுபாஷ்ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, வட்டி முழுவதும் தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள், கொரோனா கால வங்கிக் கடன் தவணையை செலுத்த 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது என்றனர்.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கொள்கையில் நாங்கள் தலையிட முடியாது. கொரோனா காலத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டி வசூலித்து இருந்தால், திருப்பி தர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வினிதா

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

செவ்வாய் 23 மா 2021