மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

தேசியக்கொடி பொறித்த கேக்கை வெட்டுவது குற்றமல்ல!

தேசியக்கொடி பொறித்த கேக்கை வெட்டுவது குற்றமல்ல!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தேசியக்கொடி பொறித்த கேக்கை வெட்டியதாக, அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியர், காவல் துணை ஆணையருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும்படி, கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்து பொது கட்சியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கோவை நீதிமன்றத்தில் பொது மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், "2013ஆம் ஆண்டு கோவையில் மத நல்லிணக்கத்துக்காகவும், ஒருமைப்பாட்டுக்காகவும் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில், ஆறு அடி நீளமும் ஐந்து அடி அகலமும் கொண்ட, தேசியக்கொடி பொறிக்கப்பட்டிருந்த கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. வெட்டப்பட்ட கேக் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் 1,000 குழந்தைகள் உட்பட சுமார் 2,500 பேருக்கு விநியோகிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், காவல் துணை ஆணையர் பர்வேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தேசியக்கொடியை அவமதிக்கும் செயல் என்றும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கோவை நடுவர் நீதிமன்றம் ஆட்சியர், துணை ஆணையர் மீது தேசியக்கொடியை அவமதித்ததாக வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பத்திரிகைச் செய்தி அடிப்படையில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மீது அரசின் முன் அனுமதியின்றி வழக்கு தொடரும்படி உத்தரவு பிறப்பித்திருக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை நேற்று (மார்ச் 22) விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சம்பவத்தின்போது, நேரடி சாட்சியாக இல்லாத, புகார்தாரரான செந்தில்குமார், பத்திரிகைச் செய்தி அடிப்படையில் அளித்த புகாரின்கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், தேசபக்தி என்பது ஒரு பொருள் அல்லது ஒரு செயலால் தீர்மானிக்கப்படுவதில்லை. செயலின் பின்னால் உள்ள நோக்கத்தைப் பொறுத்தே அதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.

சுதந்திர தினம், குடியரசு தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பவர்கள், தேசியக்கொடியைச் சட்டையில் அணிவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, நிகழ்ச்சி முடிந்தபின் கொடியை அணிந்திருக்க மாட்டார்கள் என்றார்.

தேசியக்கொடி பொறித்த ஒரு பெரிய கேக்கை வெட்டி சாப்பிடுவது, தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம், 1971இன் பிரிவு 2இன் கீழ் குற்றமாகக் கருத முடியாது என்ற நீதிபதி, அப்படி கருதினால், தேசியக் கொடியைக் கையாள மக்கள் தயக்கம் காட்டுவர் எனக் கூறினார்.

வினிதா

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

செவ்வாய் 23 மா 2021