மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

சிறப்பு டிஜிபி : விசாரணை எப்போது முடியும்?

சிறப்பு டிஜிபி : விசாரணை எப்போது முடியும்?

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் என சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாகவே முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்த வழக்கின் முழு விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் மார்ச் 16ஆம் தேதி,சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று(மார்ச் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் என கேள்வி எழுப்பினார்.

சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுவரை 87 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. டிஜிபி ராஜேஷ் தாஸின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆய்வு அறிக்கைக்கு காத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், 8 வாரத்திற்குள் வழக்கு விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை விரைந்து முடிக்க சிபிசிஐடி காவல்துறைக்கு அறிவுறுத்தினார். வழக்கு விசாரணையை ஏப்ரல் 13 ஆம் தேதி தள்ளிவைப்பதாகவும், அன்றைக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 23 மா 2021