மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

கொரோனா: தொடர்புகள் மூலம் பரவுகிறது!

கொரோனா: தொடர்புகள் மூலம் பரவுகிறது!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள தொடர்புகள் மூலமாக கொரோனா பரவுகிறது என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று(மார்ச் 23) சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதியில் கொரோனா பரவல் படிபடியாக குறையும். சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை பகுதியில் கூடுதல் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் கூடுதல் தடுப்பூசி மையங்களை அமைக்கவும் மாவட்ட ஆட்சியர், ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொளத்தூர், நங்கநல்லூர், கோடம்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது ” என தெரிவித்தார்.

ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

கோரிக்கை

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் நடத்தி முடிக்க வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்கள் மாணவர்களை அச்சத்துடனே பள்ளிக்கு அனுப்புகின்றனர் என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளனர்.

வழிபாட்டுக்கு தடை

கொரோனா பரவல் காரணமாக குமரி கோயில்களில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட கோயில் நிர்வாகத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 490 கோயில்கள் உள்ளன. இதில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், வேளிமலை குமாரகோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோவில்கள் பிரசித்தி பெற்றவை ஆகும்.

மேலே குறிப்பிட்ட கோயிலுக்கு வருகிற பக்தர்களுக்கு பிரசாதம், அர்ச்சனை, வழிபாடுகள் நடத்தவோ, தீர்த்தம் கொடுக்கவோ கூடாது. திருவிழாக்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் ஏதேனும் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்ற பிறகு நடத்தலாம் என அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 23 மா 2021