மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

ரிலாக்ஸ் டைம்: உளுந்து உருண்டை!

ரிலாக்ஸ் டைம்: உளுந்து உருண்டை!

குழந்தைகள் நன்கு வளரவும், பெரியவர்கள் களைப்படையாமல் உழைக்கவும் பிரதான உணவுகளுடன் ரிலாக்ஸ் டைமில் சாப்பிடக்கூடிய சைடிஷ் உணவுகளும் சத்தாக அமைவது அவசியம். அதற்கு இந்த உளுந்து உருண்டை பெஸ்ட் சாய்ஸ்.

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் அரை கப் தோலுடன்கூடிய கறுப்பு உளுத்தம்பருப்பு , அரை கப் வெள்ளை உளுத்தம்பருப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் பச்சரிசியை தனித்தனியே நன்கு வாசம் வரும்வரை வறுக்கவும். பின்பு மிக்ஸியில் பொடியாக்கவும் (சலிக்க வேண்டாம்). பிறகு ஒன்றரை கப் வெல்லத்தைச் சீவி மிக்ஸியில் சேர்த்துச் சுற்றவும். இதனுடன் அரிசி மாவு, உளுத்தம்பருப்பு மாவையும் சேர்த்து லேசாகச் சூடாக்கிய 50 மில்லி நெய்யையும் சேர்த்துச் சுற்றவும். உடனே உருண்டையாகப் பிடிக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம்.

சிறப்பு

இது மிகவும் சத்தான உருண்டை. வளரிளம் பருவத்தினருக்கும் பெண்களுக்கும் மிகவும் ஏற்றது. ஆரோக்கியமானது.

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 23 மா 2021