மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும்!

திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும்!

தமிழகத்தில் திட்டமிட்டப்படி சட்டமன்றத் தேர்தல் நடக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

நேற்று(மார்ச் 22) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் 6,183 ஆண்கள், 1,069 பெண்கள், 3 திருநங்கைகள் என 7,255 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனையின்போது, 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4,512 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும், 250க்கும் மேற்பட்டோர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். அதன்படி, 234 தொகுதிகளில் 4,100 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். சுயேச்சை வேட்பாளர்களுக்கு நேற்று மாலையே தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள், அதுகுறித்த விவரங்களை மார்ச் 27 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும். இதற்கென உள்ள சி1 படிவத்தில், நிலுவையில் உள்ள வழக்கு விவரம், எந்த நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, குறைந்தபட்சமாக விதிக்கப்பட்ட தண்டனை விவரம் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

இந்தப் படிவத்தை பூா்த்தி செய்து அதனை அப்படியே பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் தேர்தல் தள்ளிபோக வாய்ப்பில்லை. திட்டமிட்டப்படி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். தேர்தல் அட்டவணை, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட எதிலும் மாற்றம் இல்லை. அரசு மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து சூழ்நிலைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.

தமிழகத்தில் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 1,368 தேர்தல் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.83.99 கோடி ரொக்க பணம் உள்பட மொத்தமாக ரூ.231.63 கோடி மதிப்பிலான பணம், நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்” என தெரிவித்தார்.

வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

செவ்வாய் 23 மா 2021