மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

கட்டுப்பாட்டு வளையத்துக்குள் மீண்டும் கோயில்கள்!

கட்டுப்பாட்டு வளையத்துக்குள் மீண்டும் கோயில்கள்!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழகத்தில் உள்ள கோயில்களில் மீண்டும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத்துறை சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது.

பங்குனி மாதம் பிறந்தாலே கோயில்களில் திருவிழா, தேரோட்டம் எனக் களைகட்டுவது வழக்கம். குறிப்பாக வருகிற 28ஆம் தேதி பங்குனி உத்திரம் அன்று முருகன் கோயில்கள், சிவாலயங்கள், பெருமாள், அம்மன் கோயில்கள் மற்றும் தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற குலதெய்வ வழிபாடுகள் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருவதால் பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்குக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

“கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அத்துடன் கோயில் வளாகத்தில் கைகளைச் சுத்திகரிக்க கிருமி நாசினி வழங்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகளைக் கோயிலுக்கு வருவதை பாதுகாப்பு கருதி தவிர்க்க அறிவுறுத்தலாம்.

கோயிலுக்குள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே வரிசையில் பக்தர்கள் அனுமதிக்க வேண்டும். பக்தர்கள் கோயிலுக்கு தேங்காய் பழம், பூ போன்றவற்றை கொண்டு வந்து அர்ச்சனை செய்வதைத் தவிர்க்கலாம். அதேபோல் பிரசாதம் மற்றும் தீர்த்தம் விநியோகத்தையும் தவிர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், “பங்குனி திருவிழா நடந்து வரும் கோயில்களில் அப்பகுதிகளில் உள்ள மாவட்ட கலெக்டர், காவல்துறை அதிகாரிகள், வருவாய்துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோயில் அதிகாரிகள் எடுக்க வேண்டும். கோயில் நிர்வாகங்கள் முறையாகப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்தி, நோய் தொற்று பரவுவதைத் தடுக்க முன்வர வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 23 மா 2021