மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

மின்துறையில் ‘கேங்மேன்' ஆக இளம்பெண்!

மின்துறையில் ‘கேங்மேன்' ஆக இளம்பெண்!

பெண்கள் அனைத்துத்துறைகளிலும் பணி செய்துவரும் நிலையில் மின்சாரத்துறையில் பணிக்குச் சேர்ந்துள்ள ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி ‘கேங்மேன்' வேலை பார்த்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள சேவாக் கவுண்டனூரைச் சேர்ந்தவர் ராசா. இவருடைய மகள் 29 வயது ராஜேஸ்வரி. இவருக்கும், அந்தியூர் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஆறு மாத கைக்குழந்தை உள்ளது.

சமீபத்தில் மின்வாரியத்தில் கேங்மேன் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. இதையறிந்த திருநாவுக்கரசு அந்த வேலைக்கு விண்ணப்பித்தார். மேலும் மனைவி ராஜேஸ்வரியையும் விண்ணப்பிக்க சொன்னார். இதைத்தொடர்ந்து விண்ணப்பித்த இருவரும் அதற்கான பயிற்சியும் எடுத்துக்கொண்டார்கள்.இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கும் ராஜேஸ்வரிக்கும் கவுந்தப்பாடியிலேயே கேங்மேன் வேலை கிடைத்தது.

வேலைக்குச் சென்ற ராஜேஸ்வரி, மின்கம்பத்தில் வீட்டு இணைப்புகள் துண்டிக்கப்பட்ட தகவல் கிடைத்தால் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று, மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரி செய்கிறார். இதேபோல் மின்மாற்றியில் ஏறியும் வேலை பார்க்கிறார்.

இந்தக் காட்சிகளைக் காணும் பொதுமக்கள் ஆச்சரியமாக அண்ணாந்து பார்க்கிறார்கள்; பாராட்டுகிறார்கள்.

இதுகுறித்து ராஜேஸ்வரி, “நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள். ஏற்கனவே தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறித்து போடுவேன். இதையறிந்த என் கணவர்தான் கேங்மேன் வேலைக்கு விண்ணப்பிக்க ஊக்கம் கொடுத்தார். அதன் காரணமாகவே நான் பயமின்றி வேலை செய்கிறேன். கவுந்தப்பாடி நகர்ப்புறத்தில் பீஸ் போனால் தகவல் தருவார்கள். நான் அங்கு சென்று சரி செய்வேன். இதேபோல் நான் பணி செய்யும் இடத்திலும், என் குடும்பத்திலும் அனைவரும் ஒத்துழைப்பு தருகிறார்கள் அதுவும் காரணம். முயற்சி இருந்தால் போதும். பெண்கள் எந்த வேலையும் செய்யலாம்” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

-ராஜ்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

திங்கள் 22 மா 2021