மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

நாளை முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாளை முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை!

கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இன்று(மார்ச் 22) தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் கருத்தின் அடிப்படையிலும், பல்கலைக்கழக துணைவேந்தர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலும் முதற்கட்டமாக 2020 டிசம்பர் 7 அன்று முதுகலை இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்லூரிகளை திறக்கவும், 2021 பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரிகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. கல்லூரி விடுதிகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர், அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், கல்லூரிக் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளோடு ஆலோசிக்கப்பட்டது.

அதில், 80 சதவிகித பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டதாகவும், அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க அனுமதிக்கலாம் என பல்கலை துணைவேந்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு மார்ச் 23ஆம் தேதிமுதல் (நாளை) உயர் கல்வித் துறையின்கீழ் செயல்படும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் வாரத்தில் ஆறு நாட்கள் இணைய வழி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும்.

இறுதிப்பருவ மாணவர்களுக்கான செயல்முறை வகுப்புகள், செயல்முறைத் தேர்வுகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்கவும், இந்தப் பருவத்திற்கான இறுதித் தேர்வுகளை ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

திங்கள் 22 மா 2021