மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டுமே 20% ஒதுக்கீடு!

தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டுமே 20% ஒதுக்கீடு!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019 ஜனவரி 1ஆம் தேதி, துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

தொலைநிலை கல்வியில் படிப்பவர்கள் சில பாடங்களை ஆங்கில வழியிலும், சில பாடங்களை தமிழ் வழியிலும் படிக்கின்றனர். ஆகவே இவர்களை தமிழ் வழியில் பயின்றவர்களாக கருத இயலாது. அதனால், தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சலுகை அடிப்படையில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும். தொலைநிலை கல்வியில் இல்லாமல் கல்லூரிக்குச் சென்று தமிழ் வழியில் படித்தவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப்1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(மார்ச் 22) நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு அல்லது பணிக்கான தகுதி வரை தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே 20% இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். இவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தமிழக தலைமை செயலர், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் சான்றிதழ்களை வழங்கும் போது, எந்த வழியில் பயின்றவர்கள் என்பதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

திங்கள் 22 மா 2021