மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பிரச்சாரம் செய்ய அனுமதியில்லை!

அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பிரச்சாரம் செய்ய அனுமதியில்லை!

பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்க முடியாது எனவும், தொகுதி வாரியாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியிருந்தது.

இந்த மனு இன்று(மார்ச் 22) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதைப் போன்று, பதிவு செய்யப்பட்ட தங்கள் கட்சிக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும், எந்த பதிலும் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமில்லாத அரசியல் கட்சிகள் தொகுதி வாரியாக தேர்தல் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து, பிரச்சாரம் செய்ய அனுமதி பெறலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறினார். மேலும், தேர்தல் ஆணையத்தின் பதிலின்படி கட்சிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

வினிதா

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

திங்கள் 22 மா 2021