மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

கொடைக்கானலில் முன்கூட்டியே சீசன் தொடங்குமா?

கொடைக்கானலில் முன்கூட்டியே  சீசன் தொடங்குமா?

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் வாரத்தில் கோடை மழையுடன் குளு குளு சீசன் தொடங்கும். தற்போது, கொடைக்கானலில் காலையில் கடுமையான வெயிலும், மாலையில் குளுமையான மழையும் பெய்து வருகிறது. இதனால் சீசன் முன்கூட்டியே துவங்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் பிரபலமான மலர் கண்காட்சிக்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர் படுகைகள் அமைத்து அதில் இரு கட்டங்களாக மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து மலர் நாற்றுக்கள் வாடி வதங்கிடும் நிலையில் பிரையன்ட் பூங்கா நிர்வாகம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

தினமும் மலர் செடிகள் மீது தண்ணீர் தெளித்து குளிரூட்டுகின்றனர். இந்த கோடையால் கொடைக்கானல் வெப்ப பூமியான நிலையில் நேற்று பிற்பகலுக்கு பின் மேகமூட்டத்துடன் இதமான காலநிலையை தொடர்ந்து மழையும் பெய்தது.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த பலத்த மழை காரணமாக பாம்பார் அருவி, வெள்ளிநீர்வீழ்ச்சி, பியர்சோலா அருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அங்கு இதமான சூழ்நிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று பெய்த பலத்த மழை இந்த ஆண்டு முன்கூட்டியே சீசன் தொடங்கியதற்கான அறிகுறியாக அமைந்தது. இதனால் கொடைக்கானல் வாசிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் தற்போது அதிகரித்து வரும் கொரோனாவால் இந்த ஆண்டு கொடைக்கானலில் என்ன சூழல் ஏற்படபோகிறதோ என்ற அச்சமும் பலரிடம் உள்ளது.

-சக்தி பரமசிவன்

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

திங்கள் 22 மா 2021