மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

‘நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்போம்’!

‘நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்போம்’!

உலக தண்ணீர் தினம் - மார்ச் 22

இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் தண்ணீராலேயே சூழ்ந்துள்ளது. தண்ணீரோடு பிறந்து தண்ணீரோடு வாழ்ந்து, உயிர் தேகத்திலிருந்து பிரியும் வரை தண்ணீரோடு தான் வாழ முடிகிறது.

தண்ணீரின் முக்கியத்துவம் அறிந்தே அந்தகாலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் வனத்தில் மழைபெய்யும் போது நீர் வரும் வழிகளை ஆராய்ந்து கால்வாய்கள் வெட்டி அவசியமான இடங்களில் கண்மாய்கள், குட்டைகள், ஏரி வெட்டி தண்ணீரைத் தேக்கினர்.

எப்போதாவது பெய்யும் மழைநீரை, எப்போதும் கிடைக்கும் வகையில் தேக்கி வைத்தனர். இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து நாட்டில் விவசாயம் செழித்து வளமடைந்தது. இன்று, அதே குளம் குட்டை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலையில் இருக்கிறது.

தற்போது பெய்யும் மழை நீர் ஏரி, குளங்களுக்குச் செல்லாமல், ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் சூழ்ந்து விவசாயத்திற்கும் பயன்படாமல் மக்களுக்கும் பயன்படாமல் வழிமாறி கடைசியில் கடலில் கலக்கிறது. இதனால் விவசாயத்திற்குத் தண்ணீர் பற்றாக்குறை, மனிதனுக்குக் குடிக்கக்கூடத் தண்ணீர் கிடைப்பதில்லை.

வனத்தில் கால்பதித்து மரங்களை நாசம் செய்த மனிதனால் பருவம் தவறாமல் பெய்த பருவமழை இப்போது எப்போதாவது பெய்கிறது. வனத்தில் கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வனவிலங்குகள் கூட தண்ணீர் தேடி நிலத்திற்கு வரும் கலி காலமாகிவிட்டது

இந்த 21ஆம் நூற்றாண்டு.

பூமியில் நிலப்பகுதி 30 சதவீதம். மீதமுள்ள 70 சதவீதம் நீர்ப்பரப்பு தான். ஆனால் இந்த70 சதவீத நீர் பரப்பளவில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடிநீர் உள்ளது. தமிழகத்தில் சேர சோழ பாண்டியர்கள் எப்படி கோயில்களைக் கட்டினார்களோ, அதுபோன்று கோயில்கள் முன் பெரிய குளங்களை வெட்டி தண்ணீர் தேக்கிவைத்தார்கள். அதனால் நிலத்தடி நீர் ஓரளவு உயர்ந்தது.

பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் மிக அவசியம். இதன் முக்கியத்துவத்தை அறிந்த வள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என்று ஒரு குறளை எழுதியிருக்கிறார். மனிதனுக்கு பணம், பதவி, வசதி எல்லாம் இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் மகிழ்ச்சி பொங்க வாழ்க்கையை அனுபவிக்கமுடியாது .

இதனால்தான், தண்ணீர் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1993 முதல் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தண்ணீரைச் சேமிப்போம். சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.மழைநீர் சேமித்து நீர்வள ஆதாரங்களை அதிகரிப்பதை அவசிய பணியாக்குவோம்.

-சக்தி பரமசிவன்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திங்கள் 22 மா 2021