மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

அத்துமீறிய பேராசிரியர்: போராடிய மாணவர்களுக்கு தடியடி!

அத்துமீறிய பேராசிரியர்: போராடிய மாணவர்களுக்கு தடியடி!

சென்னை பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய தொல்லியல்துறை பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

செளந்தரராஜன் என்பவர் சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் பேராசிரியர் சௌந்தரராஜன் குறைவான மதிப்பெண்களை வழங்கியதாகவும், மதிப்பெண்களை பேராசிரியர் நோட்டீஸ் பலகையில் வெளியிடாமல் வாய்மொழியாக தெரிவித்ததாகவும் மாணவர்கள் குற்றச்சாட்டினர்.

இதையடுத்து, தன்னுடைய மதிப்பெண்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என கேட்டு சென்ற மாணவியிடம் பேராசிரியர் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதனால், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கடந்த 5 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவி நேற்று கையை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 6 வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் சேப்பாக்கத்தில் உள்ள காவல்துறை குடோனில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியரை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணை நடந்து வருவதாகவும் உடனடியாக பேராசிரியரை பணி நீக்கம் செய்ய முடியாது எனவும் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாகவும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று எழிலகம் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 22 மா 2021