மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

பிரச்சாரத்திற்கு தடை இல்லை!

பிரச்சாரத்திற்கு தடை இல்லை!

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஜலாலுதின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார்.அதில், ” தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் மட்டும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று(மார்ச் 22) தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு நடந்தது. அப்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது என்பது உண்மைதான். ஆனால், தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதால், பிரச்சாரத்திற்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

மேலும், மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 22 மா 2021