மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

தடுப்பூசி போட்டுட்டு திருமணத்துக்கு வாங்க!

தடுப்பூசி போட்டுட்டு திருமணத்துக்கு வாங்க!

ஆந்திராவில் தன்னுடைய திருமணத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த மணமகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை இந்தியாவில் 4.5 கோடி தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது.

இருப்பினும், தடுப்பூசி போட்டுக் கொள்வதினால் பக்கவிளைவுகள் ஏதும் வருமோ என்ற அச்சத்தில் மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டவில்லை. மக்களிடம் இருக்கும் தயக்கத்தை போக்கும் வகையில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சாட்டேனபள்ளியைச் சேர்ந்த கோகுல் என்ற இளைஞருக்கும், விஜயவாடாவைச் சேர்ந்த பவ்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவர்களுக்கு நேற்று

முன் தினம் நிச்சயார்த்தம் முடிந்தது.

வருகிற ஜூன் 5ஆம் தேதி நடைபெறுகிற தங்களுடைய திருமணத்தில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மணமகன் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, விஜயவாடா மருத்துவமனையில் கோகுல் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருக்கும், பவ்யா குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அந்த இளைஞரை பாராட்டியது.

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த மாதிரியான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய கோகுலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 22 மா 2021