மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

ரிலாக்ஸ் டைம்: மடக்குப் பணியாரம்

ரிலாக்ஸ் டைம்: மடக்குப் பணியாரம்

சில ஊர்களில் தயாரித்து விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கு அலாதி சுவை உண்டு. இந்த வரிசையில் மிகவும் பிரபலமான நெல்லை மடக்குப் பணியாரம் பலராலும் விரும்பி சுவைப்பது. இந்த மடக்குப் பணியாரத்தை நாமும் வீட்டிலேயே செய்து ரிலாக்ஸ் டைமில் சுவைக்கலாம்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் நான்கு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நுரை வரும்வரை நன்கு கலந்து கொள்ளவும்.

அத்துடன் இரண்டு கப் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பிறகு மூன்று டேபிள்ஸ்பூன் நெய்யை நன்கு சூடுபடுத்தி மாவின் மேல் ஊற்றவும். கை பொறுக்கும் அளவு சூட்டுக்கு வந்தபின் அதில் சிறிது சிறிதாக தேங்காய்ப்பாலைச் சேர்த்து மாவை 15 நிமிடங்கள் நன்கு அழுத்தம் கொடுத்து கெட்டியாகப் பிசைய வேண்டும். அரை மணிநேரம் மாவை அப்படியே வைத்திருந்து மீண்டும் 5 நிமிடங்கள் மாவை பிசைய வேண்டும்.

இப்போது மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும், உள்ளங்கையில் எண்ணெய் அல்லது நெய் தேய்த்து உருட்டிய மாவை வட்டமாகத் தட்டவும். வட்டமாக தட்டிய மாவை சுருள் போன்று உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான மொறுமொறுப்பான மடக்குப் பணியாரம் தயார்.

சிறப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

திங்கள் 22 மா 2021