மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

6 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி!

6 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி!

76 நாடுகளுக்கு 6 கோடி கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் பழைய மாதிரியே அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு கொண்டுவரப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது.

சண்டிகரில் உள்ள நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனத்தில் நேற்று(மார்ச் 21) ஊடக உரையாடலின் போது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசுகையில், 76 நாடுகளுக்கு 6 கோடிக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பயனாளிகளுக்கு 4.5 கோடி தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

மேலும், தடுப்பூசி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றவதற்கு அழைப்பு விடுத்தார். இந்த கொரோனா காலத்தில் விஞ்ஞானிகள் சமூகத்துக்கு நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது. இந்த அனுபவங்களைக் கொண்டு எதிர்காலத்திலும் இதுபோல ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள அறிவியல் விஞ்ஞானிகள் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் உலக புகழ்பெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இது தொடர்பாக, உத்தரகாண்ட் தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘நாட்டில் 12 மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா அதிகரித்து வருகிறது. கும்பமேளாவுக்கு இந்த மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வர வாய்ப்பு இருப்பதால் பரிசோதனைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என கூறியுள்ளார்.

பயணிகளுக்கு தடை

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகமுள்ள பிரேசில், போட்ஸ்வானா, கொலம்பியா, தென்ஆப்பிரிக்கா, தான்சானியா, பெரு, கொமொரோஸ், கானா, கென்யா, மொசாம்பிக், ருவாண்டா மற்றும் சாம்பியா ஆகிய 12 நாடுகளிலிருந்து பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மார்ச் 23 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை அமலில் இருக்கும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

திங்கள் 22 மா 2021