மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 மா 2021

வலிமையான ராணுவம் : 4வது இடத்தில் இந்தியா!

வலிமையான ராணுவம் :  4வது இடத்தில் இந்தியா!

உலகில் மிக வலிமையான ராணுவத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்டரி டைரக்ட்,(Military Direct) பட்ஜெட் திட்டங்கள், இராணுவ வீரர்களின் எண்ணிக்கை, வான்வழி, கடல், நிலம் மற்றும் அணு வளங்கள், சராசரி சம்பளம் மற்றும் உபகரணங்களின் எடை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு ”இறுதி இராணுவ வலிமைக் குறியீடு ” என்ற ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வில், உலகில் மிக வலிமையான ராணுவத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் 100க்கு 82 மதிப்பெண்கள் பெற்று சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 74 புள்ளிகள் பெற்று அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், 69 புள்ளிகள் பெற்று ரஷ்யா மூன்றாம் இடத்திலும், 61 புள்ளிகள் பெற்று இந்தியா நான்காம் இடத்திலும், 58 புள்ளிகள் பெற்று பிரான்ஸ் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

மிகப்பெரிய ராணுவ பட்ஜெட்டை கொண்டுள்ள நாடுகளில், ஆண்டுக்கு 732 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் அமெரிக்கா முன்னிலையிலும், 261 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியா 71 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடுகிறது.

அமெரிக்கா, வான்வழிப் போருக்கு 14,141 போர் விமானங்களுடன் முன்னிலையில் உள்ளது. ரஷ்யா 4,682 மற்றும் சீனா 3,587 போர் விமானங்களை மட்டுமே கொண்டுள்ளது.

ரஷ்ய கூட்டமைப்பு தரைவழி தாக்குதலுக்கு 54,866 வாகனங்களுடன் முன்னிலையில் உள்ளது. அமெரிக்கா 50,326 மற்றும் சீனா 41,641 வாகனங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஞாயிறு 21 மா 2021