jதஞ்சையில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா!

public

கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் மேலும் 25 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், 12ஆம் வகுப்பை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாணவர்களிடையே ஏற்படும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது.

இந்நிலையில், நேற்று கும்பகோணத்தில் 1200 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 25 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தஞ்சையில் ஏற்கனவே 143 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது, 168 ஆக உயர்ந்துள்ளது.

**திருப்பத்தூர்**

திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கல்லூரியில் மேலும் 400 பேருக்கு பரிசோதனை செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

**தேர்தல் பணியாளருக்கு தடுப்பூசி**

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று(மார்ச் 20) தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கொரோனா பரவுவதை தடுப்பதற்காக முன்னெடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கண்காணித்து வருகிறது. பொது இடங்களில் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் வயது வரம்பின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறி ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

**வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *