மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 மா 2021

ரிலாக்ஸ் டைம்: கேரட் ஐஸ்க்ரீம்!

ரிலாக்ஸ் டைம்: கேரட் ஐஸ்க்ரீம்!

வெயில் காலம் தொடங்கியாச்சு. வெளியிலும் போக முடியலை. இன்னிக்கு சண்டே. ஸ்பெஷலாக ஏதாச்சும் செய்து ரிலாக்ஸ் டைமில் சாப்பிடலாமே என்று நினைப்பவர்களுக்கு இந்த ஹெல்த்தி கேரட் ஐஸ்க்ரீம் உதவும். நாள் முழுக்கப் புத்துணர்ச்சி தரும்.

எப்படிச் செய்வது?

நான்கு கேரட்டை தோல் சீவி துண்டுகளாக்கி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். பின்னர் அதை ஆறவைத்து, கால் கப் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு கப் காய்ச்சிய பாலில் சேர்த்துக் கலந்து சூடாக்கி, கிளறி, கொதி வந்ததும் இறக்கவும். இதை ஆறவைத்து கிண்ணத்தில் ஊற்றி, ஃப்ரீஸரில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும். அதை மறுபடியும் மிக்ஸியில் அடித்து ஃப்ரீஸரில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும். அதை மீண்டும் மிக்ஸியில் அடித்து சின்னச் சின்ன பவுல்களில் ஊற்றி, மேலே பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவை சேர்த்து, இரண்டு மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து எடுத்தால், சுவையான கேரட் ஐஸ்க்ரீம் ரெடி

சிறப்பு

கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். கோடைகாலத்தில் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை சமப்படுத்தும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

ஞாயிறு 21 மா 2021