மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 மா 2021

கட்சி கொடிகளில் கேக்!

கட்சி கொடிகளில் கேக்!

தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிற வேளையில், மக்களை கவருவதற்காக, அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்வது, பிரச்சாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்பாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வேலூரில் கட்சி கொடிகள் பொறிக்கப்பட்ட கேக்குகள் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

வேலூர் மாவட்டம், கொணவட்டத்தைச் சேர்ந்த தனியார் பேக்கரி உரிமையாளர், தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி மக்களையும், கட்சியினரையும் கவரும் வகையிலும், வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கிலும் பல்வேறு கட்சிகளின் சின்னம், கொடிகள் பொறிக்கப்பட்ட கேக்குககளைத் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளார்.

அதில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சின்னம், கொடி பொறிக்கப்பட்டுள்ள கேக்குகள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சிக் கொடிகள், தலைவர்களின் உருவம் உள்ளிட்டவை பொறிக்கப்பட்ட கேக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கட்சிகொடிகள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்களும் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

ஞாயிறு 21 மா 2021