மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 மா 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - வேண்டியவை... வேண்டாதவை!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - வேண்டியவை... வேண்டாதவை!

சமையலறையில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா என்று கேட்டால், காஸ் விற்கும் விலையில் அதைத்தான் சிக்கனமாக, கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் பதில்கள் வரலாம். அவற்றை ஓரமாக வைத்துவிட்டு, உங்கள் சமையலறையில் இருக்கும் ஆபத்தான சில விஷயங்களையும் அவற்றை எப்படிக் கையாளலாம் என்பது பற்றியும் இன்றைய சண்டே ஸ்பெஷலில் பார்ப்போம்.

* கிச்சனென்றாலும் மொபைல்தான் முதல் பாயின்ட். கார் ஓட்டுவதைவிட கவனமாக இருக்க வேண்டிய இடம் சமையலறை. கார் ஓட்டும்போது மொபைல் பேசலாமா? பிறகேன் சமைக்கும்போது மட்டும்? அப்படி அவசியமென்றால் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு பேசுங்கள். ஒரு கையில் மொபைலுடன் சமைப்பது மிகவும் ஆபத்தானது. அதைச் செய்யாதீர்கள்.

* டிரெட் மில் போலவே, பல வீட்டு கிச்சன்களில் சும்மாவே கிடக்கும் ஒன்று சிம்னி. சரியாக, நாம் சமைக்கும் பாத்திரத்துக்கு நேராக மேலே இருக்கும் சிம்னி நிச்சயம் கூடுதல் கவனம் கோரும் ஒன்று. பயன்படுத்தாமல் விடுவதால் அதிலிருந்து தூசியோ, உள்ளிருக்கும் பூச்சிகளோ சமைக்கும் பொருளில் நமக்கே தெரியாமல் விழும் ஆபத்துண்டு... கவனம்.

* மின்சாரக் கருவிகள்தான் கிச்சனின் மிகப்பெரிய ஆபத்து. மிக்ஸியின் ஒயர் எரிந்து கிடப்பது, சிலிண்டர் டியூப் கட் ஆகியிருப்பது, ஆர்.ஓ. யூனிட்டின் பவர் பாயின்ட் அருகே தண்ணீர் சொட்டுவது போல எந்தப் பிரச்சினை என்றாலும் போர்க்கால அடிப்படையில் சரி செய்யுங்கள். மின் கசிவோ, காஸ் கசிவோ... சின்ன சந்தேகம் என்றாலும் உடனே சிலிண்டரை மூடுங்கள்; மெயின் பவரை ஆஃப் செய்யுங்கள்.

* வேண்டியவை, வேண்டுமென நினைத்த நொடியில் கையில் கிடைக்க வேண்டுமென்பது சமையலறையின் முக்கியமான தேவை. இந்தப் பட்டியலில் கத்திகளும் உண்டு. ஆனால், குழந்தைகள் கைகளுக்கும் இது போன்ற ஆயுதங்கள் எளிதில் கிடைக்கக் கூடாது. அதனால், குழந்தைகள் கைக்குப் போகக்கூடாத விஷயங்களை உயரமான இடங்களில் வைத்துப் பழகுங்கள்.

* உப்பு, பேக்கிங் சோடா போன்றவை சமையலுக்கு மட்டுமல்ல; சமையலறைக்கும் பயன்படும். இவை இயற்கையான தீ அணைப்பான்கள். சமைக்கும்போது சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டால் இவற்றைக் கொண்டு அதை அணைக்கலாம். அதனால், எப்போதும் ‘அணைக்கத் தேவையான அளவு’ உப்பும் பேக்கிங் சோடாவும் இருப்பு வைத்துக் கொள்ளுங்கள். எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்து கொண்டு பயன் படுத்துங்கள்.

* உடைந்ததை ஒட்டவைத்தும், அறுந்ததைச் சேர்த்துவைத்தும் உபயோகிப்பது இந்தியர்களுக்கு கை வந்த கலை. ஆனால், சமையலறை மின்சாதனங்களில் இந்த மாதிரி ரிஸ்க் வேண்டாம். சமையலறைகள் பெரும்பாலும், மற்ற அறைகளுடன் ஒப்பிடும்போது தேவையைவிட அளவில் சிறியதாகவே இருக்கின்றன. அங்கே இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் பேராபத்து.

* ஸ்க்ரூ டிரைவருக்குப் பதில் கத்தியைப் பயன்படுத்துவது போல எல்லாவற்றுக்கும் சப்ஸ்டிட்யூட் பயன்படுத்துவதிலும் நாம் கில்லாடிகள். அந்த லிஸ்ட்டில் முக்கியமான ஒன்று ஏணி. இடத்தை அடைத்துக் கொள்ளும் என்பதாலே பல வீடுகளில் ஏணியே இருக்காது. ஆனால், சமையலறையில் உள்ள உயரமான இடங்களில் பொருள்களை அடைத்து வைத்திருப்போம். அது தேவை என்னும்போது இரண்டு சேர்களை ஒன்றன் மீது ஒன்றை வைத்து ஏறி எடுப்போம். அப்புறம்... அடுப்பின் மீதும், அடுக்கி வைத்த பாத்திரங்களின் மீதும் விழுவோம். முதலில் தேவையான உயரத்தில் ஓர் ஏணியை வாங்கி வையுங்கள்.

நேற்றைய ஸ்பெஷல்:வெண்டைக்காய் கிரிஸ்பி ஃப்ரை!

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

ஞாயிறு 21 மா 2021