மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

விதிகளை பின்பற்றி மின் இணைப்பு வழங்க அறிவுரை!

விதிகளை பின்பற்றி மின் இணைப்பு வழங்க அறிவுரை!

மின் இணைப்பு வழங்கும்போது தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என மின்சார வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை கன்ஸ்யூமர் காஸ் என்ற அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், உரிய அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் வழங்கக் கூடாது என 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில், கட்டடப் பணி முடிப்பு சான்றிதழை கட்டாயமாக்கி 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை பிறப்பித்தது. அதனால், புதிய கட்டடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டட பணி முடிப்பு சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், உத்தரவு பிறப்பித்து சில மாதங்களே ஆன நிலையில், அதை திரும்பப் பெறுவதாக மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று(மார்ச் 20) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, குறைந்த மின்னழுத்தத்தை பயன்படுத்தும் சிறிய கடைகள், ஒரு குடியிருப்பில் இருக்கின்ற சிறிய பகுதிகள் ஆகியவற்றிற்கு மட்டும் பணி முடிப்பு சான்று கட்டாயமில்லை என்றும், சொத்து வரி சான்றை சமர்ப்பிக்க வேண்டுமென என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை உள்ளாட்சி அமைப்புகள், சீல் வைத்த உடனேயே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும் என மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

விளக்கத்தை கேட்ட நீதிபதிகள், மின் இணைப்பு வழங்கும் போது, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகளை கண்டிப்புடன் பின்பற்றும்படி மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சனி 20 மா 2021