மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு, பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளை மூட வேண்டும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை வைத்த நிலையில், அதுதொடர்பாக தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து இன்று(மார்ச் 20) மதியம் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9,10,11ஆம் வகுப்புகளுக்கு வரும் 22ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. 9 -11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும். இந்த வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே ஆல்பாஸ் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

12ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளதாலும், அவர்கள் பொத்தேர்வை எழுத வேண்டியதாலும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கல்வி வாரியம் தவிர மற்ற தேர்வு வாரியங்களுக்கு அறிவிக்கப்பட்ட 10ஆ ம் வகுப்பு தேர்வுகள் அறிவித்தபடி நடக்கும். இதற்காக அவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், அவர்களுக்குப் பள்ளி விடுதிகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மே 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

சனி 20 மா 2021