மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் : இந்தியா எந்த இடம்?

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் : இந்தியா எந்த இடம்?

உலகில் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 139வது இடத்தைப் பிடித்துள்ளது.

மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்ற நோக்கத்தில் ஐ.நா. பொதுச்சபை 2012 ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 20 ஆம் நாளை மகிழ்ச்சி நாளாக அறிவித்து ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படும் ‘ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க்’ என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

நாட்டு மக்களின் மகிழ்ச்சியான சூழல், ஜிடிபி நிலவரம், சமூகச்சூழல், ஆதரவு, தனிநபர் சுதந்திரம், ஊழல் ஆகியவை குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்தாண்டு, இரு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது, முதலாவதாக கொரோனா பாதிப்புகள் குறித்தும், அதனால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட பாதிப்பு பற்றியும், இரண்டாவதாக கொரோனா தொற்றை தடுக்க ஒவ்வொரு நாடும் எந்தமாதிரியான நடவடிக்கைகளை எடுத்தது என்பதை மதிப்பிட்டும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்திய மக்களிடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டை போன்று, இந்தாண்டு தொலைபேசி மூலம் பதிலளிக்க பலரும் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், 149 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் உலகில் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தொடர்ந்து 4வது ஆண்டாக இந்தாண்டும் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அந்த பட்டியலில் முதல் 20 இடங்களை பிடித்த நாடுகள்:

1. பின்லாந்து

2.டென்மார்க்

3. ஸ்விட்சர்லாந்து

4. ஐஸ்லாந்து

5. நெதர்லாந்து

6. நார்வே

7. ஸ்வீடன்

8. லக்ஸம்பர்க்

9. நியூசிலாந்து

10. ஆஸ்திரியா

11. ஆஸ்திரேலியா

12. இஸ்ரேல்

13. ஜெர்மனி

14. கனடா

15. அயர்லாந்து

16. கோஸ்டாரிகா

17. ஐக்கிய இராச்சியம்

18. செக் குடியரசு

19. அமெரிக்கா

20. பெல்ஜியம்

கடந்த ஆண்டு 94வது இடத்தில் இருந்த சீனா, இந்தாண்டு 84-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. சீனா கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த தீவிரமான முயற்சிகள், எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு 140வது இடத்தில் இருந்த இந்தியா இந்தாண்டு 139வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 105வது இடத்திலும், வங்கதேசம் 101வது இடத்திலும், இலங்கை 129வது இடத்திலும் உள்ளன.

இந்த பட்டியலில் மிகவும் பின் தங்கியுள்ள நாடுகள்:

145- லிசோதா

146- போட்ஸ்வானா

147- ருவாண்டா

148- ஜிம்பாப்வே

149- ஆப்கானிஸ்தான்

கடைசி இடத்தில் உள்ள ஆஃப்கானிஸ்தான் மகிழ்ச்சியற்ற நாடாக கருதப்படுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 20 மா 2021