மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

ரிலாக்ஸ் டைம்: கொரோனாவை தடுக்க தர்பூசணி சப்ஜா ஜூஸ்!

ரிலாக்ஸ் டைம்:  கொரோனாவை தடுக்க தர்பூசணி சப்ஜா ஜூஸ்!

கோடை வெயிலோடு கொரோனாவையும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம். வழக்கத்தைவிட இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமாமே என்பதில் தொடங்கி, கோடையில் நோய் எதிர்ப்புத் திறன் கூடுமா என்பதுவரை சம்மர் குறித்த சந்தேகங்கள் ஏராளம்... இந்த நிலையில் கோடையை எதிர்க்க நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க இந்தத் தர்பூசணி சப்ஜா ஜூஸ் உதவும்.

எப்படிச் செய்வது?

ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையைத் தண்ணீர் ஊற்றி எட்டு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். 150 கிராம் தர்பூசணியைத் தோல் விதை நீக்கி அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த தர்பூசணி, ஊறிய சப்ஜா விதை, தேவைக்கேற்ப தேன், அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, சிறிதளவு புதினா இலை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

சிறப்பு

சப்ஜா விதையில் ஒமேகா 3 அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. மேலும் நார் சத்து அதிகம் உள்ளதால் கோடையில் ஏற்படும் மலச்சிக்கலுக்கு இந்த விதை சிறந்த தீர்வாக உள்ளது. நெஞ்செரிச்சல் மற்றும் உணவு பாதையில் ஏற்படும் புண்களை நீர்ச்சத்து அதிகமுள்ள இந்த ஜூஸ் போக்கும்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

சனி 20 மா 2021