மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

கொரோனா: பள்ளிகளுக்கு விடுமுறை!

கொரோனா: பள்ளிகளுக்கு விடுமுறை!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குறைந்து வந்து கொண்டிருந்த கொரோனா தாக்கம், தற்போது மீண்டும் அதனுடைய தாக்கத்தை அதிகபடுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (மார்ச் 19) புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கொரோனா தொடர்பான உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. அதில்,புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தார்.

கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பணிகளை அதிகப்படுத்தவும், தொற்று அதிகமுள்ள இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த சுகாதாரத் துறை, புதுச்சேரியில் பள்ளிகளை தற்காலிகமாக மூடவும் பரிந்துரை செய்தது.

இதையடுத்து, புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு வெளியிட்ட அறிவிப்பில், “அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை வரும் 22ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், 9ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை மாணவர்களின் தேர்வு, அண்டை மாநில கல்வி வாரியங்களால் நிர்ணயிக்கப்படுவதால் அக்கல்வி வாரியங்களின் வழிகாட்டுதலின்படி இந்த வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பிறகு முடிவு எடுக்கப்படும். அதுவரை வாரம் 5 நாட்கள் பள்ளிகள் இயங்கும். சுகாதாரத்துறை அளித்த பரிந்துரையின்படியும், ஆளுநர் உத்தரவின்படியும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநிலக் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கல்வித்துறைக்கென்று தனி வாரியம் கிடையாது. இதனால் தமிழக அரசின் கல்வித்திட்டம் மற்றும் வழிமுறைகளே அங்கு பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் 4 பேராசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கல்லூரிக்கு மார்ச் 28ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் தொடங்கி ஒரு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், கொரோனா காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வரும் 28ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் கிடையாது. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களில் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும், தேவைகள் இருப்பின் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தலாம் எனவும் குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வுகள் மே 4 ஆம் தேதியும், ஐசிஎஸ்இ தேர்வுகள் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியும் தொடங்கப்படவுள்ளது.

இதுபோன்று தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வினிதா

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

சனி 20 மா 2021