மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

கிச்சன் கீர்த்தனா: வெண்டைக்காய் கிரிஸ்பி ஃப்ரை!

கிச்சன் கீர்த்தனா: வெண்டைக்காய் கிரிஸ்பி ஃப்ரை!

கோடைக்காலத்துக்கு ஏற்ற உணவில் தயிர் சாதம் முக்கிய இடம்பிடிக்கும். இந்த தயிர் சாதத்துக்கு தினமும் ஊறுகாய்தானா என்பவர்களுக்கு உதவும், இந்த வெண்டைக்காய் கிரிஸ்பி ஃப்ரை. தயிர் சாதத்துக்கு மட்டுமல்ல... ரச சாதத்துக்கும் ஏற்ற சைடிஷ் இது.

என்ன தேவை?

வெண்டைக்காய் - 300 கிராம்

அரிசி மாவு - அரை கப்

சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - 2 டீஸ்பூன் மிளகுத்தூள் அல்லது

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெண்டைக்காயை ஈரத் துணியால் துணியால் துடைத்து வைக்கவும். பிறகு ஒரு இன்ச் துண்டுகளாக்கவும். வெண்டைக்காயுடன் அரிசி மாவு, சாட் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் அல்லது மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாகப் புரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து வெண்டைக்காய் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

நேற்றைய ஸ்பெஷல்: பனீர் - குடமிளகாய் புர்ஜி!

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

சனி 20 மா 2021