மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

யானைகள் வழித்தடம்: நீதிமன்றம் அறிவுரை!

யானைகள் வழித்தடம்: நீதிமன்றம் அறிவுரை!

யானைகள் வழித்தடங்களில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு வெளியே மசினக்குடி பகுதியில் சுவாச பிரச்சினையுடன் சுற்றி வந்த ரிவால்டோ எனும் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானையை வனத்துறையினர், யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர். ஆனால், வனத்துறையினரால் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், யானையை பிடிக்கத் தடைவிதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் ஆர்வலர் முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று(மார்ச் 19) தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, ரிவால்டோ யானை குணமடைந்து விட்டதாகவும், இந்த யானையால் யாரும் காயமடையவில்லை, எந்த சேதமும் ஏற்படவில்லை. அதனால், யானையை பிடிக்கக் கூடாது எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

யானையை பிடித்து சிகிச்சை அளித்து மீண்டும் வனத்தில் விடப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் வளர்ப்பு யானைகள் அதிகளவில் இருக்கின்றன. காட்டு யானைகள் மற்றும் வளர்ப்பு யானைகளின் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கேட்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், யானைகள் வழித்தடங்களில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகள் வழித்தடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 19 மா 2021