மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

வீட்டிலிருந்து வேலை செய்வதை விரும்பாத நிறுவனங்கள்!

வீட்டிலிருந்து வேலை செய்வதை விரும்பாத நிறுவனங்கள்!

இந்தியாவில் 59 சதவிகித நிறுவன முதலாளிகள், தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை விரும்பவில்லை என ஆய்வு ஒன்று கூறுகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாத கடைசியில் இருந்து ஊரடங்கு அமலுக்கு வந்தது. கொரோனா பரவல் சற்று குறைவதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதனால், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அனுமதித்தன. இதன் காரணமாக, பலரும் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ’இண்டீட்’ என்ற ஆய்வு நிறுவனம் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்கள் குறித்தும், முதலாளிகளின் விருப்பம் குறித்தும் ஆய்வு ஒன்று மேற்கொண்டுள்ளது. 1200 ஊழியர்கள் மற்றும் 600 முதலாளிகளிடையே இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், ஊரடங்குக்கு பிறகும் 67சதவிகித பெரிய மற்றும் 70 சதவிகித நடுத்தர அளவிலான இந்திய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை விரும்பவில்லை என தெரிவித்துள்ளன.

67 சதவிகித இந்திய நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்ப்பதையும், 11 சதவிகித நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதையும், 22 சதவிகித நிறுவனங்கள் இரண்டு முறையிலும் வேலை பார்க்க அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

45 சதவிகித ஊழியர்கள் இந்த இடபெயர்வு தற்காலிகமானது என்றும், 50 சதவிகித ஊழியர்கள் தேவைப்பட்டால் தங்கள் சொந்த ஊரிலிருந்து அலுவலக சூழலுக்கு திரும்ப தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா கட்டுக்குள் வரும் வரை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய 24 சதவிகிதத்தினரும், வீட்டிலேயே நிரந்தரமாக இருக்க 9 சதவிகிதத்தினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களில் 32 சதவிகித்தினர் சம்பளம் குறைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும், 61 சதவிகித்தினர் சம்பள குறைப்பை ஏற்க தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

41 சதவிகித ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதினால் செல்லபிராணிகள், குழந்தைகள் மூலம் தொந்தரவு ஏற்படுவதாகவும், வேலையை முடிப்பதற்கான தேவையான தொழில்நுட்ப வசதி வீட்டில் இல்லை என 28 சதவிகிதத்தினரும் கூறுகின்றனர்.

வீட்டிலிருந்து வேலை செய்வதினால், 36 சதவிகித்தினர் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் சக ஊழியர்களுடன் தொடர்பில்லாதவர்களாகவும் உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 19 மா 2021