மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

ஏன் தடுப்பூசி வீணாகின்றன?

ஏன் தடுப்பூசி வீணாகின்றன?

கடந்த புதன்கிழமை(மார்ச் 17) அனைத்து முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தடுப்பூசி மருந்துகள் எதனால் வீணடிக்கப்படுகின்றன என்பதை கண்டறிந்து, அதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என முதல்வர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், பெரும்பாலான மையங்களில், தடுப்பூசி குப்பியில் இருந்து தேவையான மருந்தினை எடுக்க போதுமான பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 7 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. அவற்றில் 3.46 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன. அதில் சுமார் 6.5% தடுப்பூசிகள் வீணாகியுள்ளன. அதாவது, இந்தியாவில் 23 லட்சத்திற்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசிவீணடிக்கப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, தெலுங்கானாவில் 17.6 சதவீதமும், ஆந்திராவில் 11.6 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 9.4 சதவீதமும், கர்நாடகாவில் 6.9 சதவீதமும் , ஜம்மு காஷ்மீரில் 6.6 சதவீதமும் தடுப்பூசி வீணாகியுள்ளது.

சில மாநிலங்களில் தேசிய சராசரிக்கு குறைவான அளவில் தடுப்பூசி மருந்து வீணாகியுள்ளது. ராஜஸ்தானில் 5.6%, அசாமில் 5.5%, குஜராத்தில்5.3%, மேற்கு வங்கத்தில் 4.8% , பீகாரில் 4% , தமிழ்நாட்டில் 3.7% தடுப்பூசி வீணாகியுள்ளது.

கோவிஷீல்டில் ஒரு வயலில்(vial) 10 பேருக்கும், கோவாக்சினில் ஒரு வயலில்(vial) 20 பேருக்கும் தடுப்பூசி போடக்கூடிய அளவு மருந்து இருக்கும். அதாவது, ஒருநபருக்கு 0.5 மில்லிலிட்டர் மட்டுமே பயன்படுத்தப்படும். தடுப்பூசி குப்பியை திறந்த 4 மணி நேரத்திற்குள் அனைத்து டோஸ்களையும் போட்டுவிட வேண்டும். அதற்கு மேல் அந்த தடுப்பூசியை பயன்படுத்த முடியாததால், வீணாகிறது.

எல்.என்.ஜே.பி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார் கூறுகையில், ”டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் மட்டுமே 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. உதாரணமாக, மாலை 6 மணிக்கு ஒரு தடுப்பூசி குப்பியைத் திறந்து இரண்டு பேருக்கு தடுப்பூசி போடுகிறோம். அதற்கடுத்து தடுப்பூசி போடுவதற்கு யாரும் இல்லையென்றால், மீதமுள்ள டோஸ்களை அழிக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.இந்த தடுப்பூசி மருந்து வெகுஜன மக்களுக்காக தயாரிக்கப்படுகின்ற நிலையில், அதை போட்டு கொள்வதற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதனால், அதிகளவிலான மக்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வர வேண்டும்” என கூறினார்.

முறையான பயிற்சி பெறாத பணியாளர்கள், 10 பேருக்கு போட வேண்டிய தடுப்பூசியை 9 நபர்களுக்கு மட்டுமே போடுகின்றனர். சில இடங்களில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் ஒரு வயலில் (Vial) இருந்து 10 பேருக்கு பதிலாக 11 நபர்களுக்கு தடுப்பூசி போடுகின்றனர்.

தடுப்பூசி செலுத்துவதற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களில் விரிவான திட்டங்கள் ஏதும் இல்லாத காரணத்தாலும், முறையான பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லாத காரணத்தாலும்தான் அதிகளவு தடுப்பூசி மருந்துகள் வீணாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனால் சரியான திட்டமிடலுடன் கூடிய விரிவான திட்டங்களை வகுத்து, முறையான பயிற்சியுடன் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தால், தடுப்பூசி வீணாவதை தடுக்க முடியும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 19 மா 2021