மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

பள்ளிகளுக்கு தலைமை தேர்தல் அலுவலர் உத்தரவு!

பள்ளிகளுக்கு தலைமை தேர்தல் அலுவலர் உத்தரவு!

வாக்குச் சாவடி மையங்களில் கேமரா பொருத்தும் பணிகளுக்காக பள்ளிகள் திறந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தலைமைத் தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நாளன்று தமிழகம் முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில்,” தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் வருகின்ற ஏப்ரல் 6 தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 90,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. மார்ச் 22, 23, 27 ஆகிய தேதிகள் மற்றும் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை வாக்குச்சாவடி மையங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுவதால், பள்ளிகள் திறந்து இருப்பதை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்கு

இதையடுத்து, இன்று(மார்ச் 19) செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் அஞ்சல் முறையில் வாக்களிக்க இதுவரை 2,08,963 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 49,114 பேர் மாற்றுத் திறனாளிகள். சுமார் 1.59 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்.

தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் இதுவரை 35 ஆயிரம் பேர் அஞ்சல் முறையில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாரும் தபால் வாக்குக்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

விலை நிர்ணய பட்டியல்

சென்னை மாவட்ட வேட்பாளர்களின் செலவினங்களுக்கான விலை நிர்ணயப் பட்டியலை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் வெளியிட்டுள்ளார்

அதில், பந்தலுக்கான அதிகபட்ச விலை ரூ. 3,500, சாமியானா பந்தலுக்கு ரூ.9,500, ஆயிரம் சுவரொட்டிகளுக்கு ரூ.12,500, ஒரு சதுர அடி கொண்ட கட் அவுட்டுக்கு ரூ. 65, வாழை மரத்துக்கு ரூ.700, பட்டாசுக்கு ரூ.600, தொப்பிக்கு ரூ.50 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சைவ பிரியாணி, சாப்பாடு, சிற்றுண்டிக்கு 100 ரூபாய், கலவை சாதத்துக்கு 50 ரூபாய், குளிர்பானங்களுக்கு 75 ரூபாய், தேநீருக்கு 10 ரூபாய், காபி மற்றும் பாலுக்கு 15 ரூபாய், தண்ணீர் ஒரு லிட்டருக்கு 20 ரூபாய், மோருக்கு 10 ரூபாய், ரஸ்னாவுக்கு 20 ரூபாய், மட்டன் பிரியாணி 200 ரூபாய், சிக்கன் பிரியாணி 180 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தங்கும் விடுதிகளில் ஒரு நாள் வாடகையாக, 5 நட்சத்திர விடுதிகள் எனில் 7,500 ரூபாயும், 3 நட்சத்திர விடுதிகள் எனில் 5000 ரூபாயும், சாதாரண விடுதிகளில் 3 ஆயிரத்து 500 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு நிறைவு

இந்நிலையில், 12ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல், இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது . தமிழகத்தில் இதுவரை 3,818 ஆண்கள், 747 பெண்கள் மற்றும் 2 மூன்றாம் பாலினத்தவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வெள்ளி 19 மா 2021