மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

மாங்கல்ய தோஷம்: மாணவனை மணந்த ஆசிரியை!

மாங்கல்ய தோஷம்:  மாணவனை மணந்த ஆசிரியை!

மாங்கல்ய தோஷத்தில் இருந்து விடுபட தன்னிடம் டியூஷன் படிக்க வந்த 13 வயது மாணவனை பொம்மை திருமணம் செய்து கொண்ட ஆசிரியை பற்றிய தகவல் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பஸ்தி பாவா கெல் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு மாங்கல்ய தோஷம் காரணமாக நீண்ட நாட்கள் திருமணம் நடக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகவும் கவலை அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் ஒரு சாமியாரை சந்தித்தனர்.

இந்த தோஷம் அல்லது குறைபாட்டிலிருந்து விடுபட ஒரு சிறுவனை பொம்மை திருமணம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அந்த ஆசிரியை தன்னிடம் டியூஷன் படிக்கும் 13 வயது மாணவன் ஒருவரைத் தேர்வு செய்துள்ளார்.

மாணவன் வீட்டுக்குச் சென்று சிறுவன் ஒருவாரம் தன் வீட்டில் தங்கியிருந்து படிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்குச் சிறுவனின் பெற்றோரும் சம்மதித்து விட்டனர். ஒருவாரம் கழித்து சிறுவன் வீடு திரும்பியதும் ஆசிரியை மாணவனை பொம்மை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் பஸ்தி பாவா கெல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆசிரியையும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மெஹந்தி விழா மற்றும் முதல் இரவு உள்ளிட்ட திருமண சடங்குகளை வலுக்கட்டாயமாக செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட சடங்குகளை முடித்த பின்னர் ஆசிரியை தனது வளையல்களை உடைத்து விதவையாக அறிவிக்கப்பட்டார். குடும்பத்தினர் இரங்கல் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த புகாரை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை போலீஸ் நிலையம் வந்து சமரசம் செய்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் அழுத்தத்தின்பேரில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் புகாரை திரும்பப் பெற்று உள்ளனர்.

இதுகுறித்து, பஸ்தி பாவா கெல் காவல் நிலைய அதிகாரி ககன்தீப் சிங் சேகோன் போலீஸாருக்கு புகார் கிடைத்ததை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், “இரு வீட்டாரிடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அது திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக கவனித்து விசாரணை செய்து வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

சிறுவன் மைனர் என்பதால் மாணவரை விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும், மாணவரை சிறையில் அடைப்பது சட்ட விரோதமானது என்றும் டிஎஸ்பி ஜலந்தர் குர்மீத் சிங் கூறியுள்ளார். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை மற்றும் அவரது பெற்றோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடப்பட்டது.

-ராஜ்

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வெள்ளி 19 மா 2021