மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

சஞ்சீவி மலையில் காட்டுத்தீ!

சஞ்சீவி மலையில் காட்டுத்தீ!

கோடைகாலம் துவங்கினாலே தேனி ஶ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரியும். விடிய விடிய வனத்தில் தீ பற்றி எரிந்து காலையில் காற்றில் தீ சாம்பல் பறந்து வந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் சாம்பலாய் சிதறி கிடக்கும்.

இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் தீ பரவல் இதுவரை இல்லாத நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அருகில் உள்ள ராஜபாளையம் நகரின் மையப்பகுதியில் உள்ள சஞ்சீவி மலையில் நேற்று (மார்ச் 18) மாலை தீ பற்றி எரிய துவங்கி இரவு பலத்த காற்றுடன் ஆக்ரோஷமாக எரிந்தது. இரவு முழுவதும் எரிந்த தீயால் பொதுமக்கள் பெரும் பதட்டத்துக்கு உள்ளாகினர்.

சஞ்சீவி மலையில் தீ விபத்து ஏற்பட்டதால் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ராஜபாளையம் மைய பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலைப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்த இந்த காட்டுத்தீ சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பரவி மலையில் கொடூரமாக எரிந்து கொண்டிருந்தது.

மேலும் மலை அடிவார பகுதியில் குடியிருப்புகள் அதிகளவில் இருப்பதால் குடியிருப்புப் பகுதியில் தீ பரவாமல் தடுக்க பொதுமக்கள் தீயை அணைக்க போராடினர்.

இந்த தீ விபத்திற்க்கான காரணம் குறித்து போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.

தீ எரிந்த சஞ்சீவி மலையை சுற்றி குடியிருப்புப் பகுதி அதிகமாக உள்ளன என்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உரைந்துபோயிருந்தனர்

சக்தி பரமசிவன்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 19 மா 2021