மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

ஸ்டெர்லைட் வழக்கை அவசரமாக விசாரிக்க மறுப்பு!

ஸ்டெர்லைட் வழக்கை அவசரமாக விசாரிக்க மறுப்பு!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் மேல்முறையீடு வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டக்குழுவினர் கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பேரணி நடத்தினர். அப்போது அவர்கள்மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாயினர். இதைத் தொடர்ந்து மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. பின்னர் ஆலையைத் திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்ச நீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்துக்குத் தெரிவித்து இருந்தது.

இதையடுத்து, ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பல மாதங்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது. மேலும், வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை வைத்தது. அதில், ‘ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை உடனே விசாரிக்க வேண்டும். அதுவும் வழக்கை ஏப்ரல் முதல் வாரத்தில் அவசர வழக்காகத் தொடர்ந்து விசாரிக்க வேண்டும்’ என வேதாந்தா நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வெள்ளி 19 மா 2021