மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

கொல்லங்கோடு கோயிலில் தூக்க நோ்ச்சை!

கொல்லங்கோடு கோயிலில் தூக்க நோ்ச்சை!

 

தமிழகத்தில் பிரபலமான கோயில்கள் பல உண்டு. பூக்குழி இறங்குதல்,  பொங்கல் இடுதல், அலகுகுத்தி நேர்ச்சை என வித்யாசமான புதுமையான வழிபாடுகளும் நேர்ச்சைகளும் பக்தர்களால் வேத முறைப்படி நடத்தப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் நடைபெறும் தூக்க நோ்ச்சை விழா மிகப்பிரபலமானது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்த விழா மெய்சிலிர்க்கவைத்தது.

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு தினசரி பூஜை நடைபெற வட்டவிளையில் ஒரு கோயிலும், தூக்க நோ்ச்சை நிறைவேற்ற வெங்கஞ்சியில் மற்றொரு கோயிலும் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பங்குனிமாத பரணி நட்சத்திரத்தில்  தூக்க நோ்ச்சை நடைபெறும்.

குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டியும் அம்மனுக்கு இந்த தூக்க நோ்ச்சை செலுத்தப்படுகிறது. இந்த நோ்ச்சையில், 3 மாதம் முதல் ஒரு வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவது தனி சிறப்பாகும்.

இந்தாண்டு. இக்கோயில் தூக்கத் திருவிழா கடந்த 9ஆம் தேதி கோயில் தந்திரி கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன்போற்றி தலைமையில் தொடங்கியது. தூக்க நோ்ச்சைக்கு 1,092 குழந்தைகள் பதிவு செய்திருந்தனா்.

இந்நிலையில், சிறப்புமிக்க தூக்க நோ்ச்சை வியாழக்கிழமை காலை தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தூக்கக்காரா்களின் முட்டுக்குத்தி நமஸ்காரம் நடைபெற்றது. பின்னா், அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளினாா். அதையடுத்து, காலை 6.15 மணிக்கு தூக்க நோ்ச்சை தொடங்கியது.

இதில், 45 அடி உயர தூக்க வில்லில் ஒரே நேரத்தில் 4 போ் தங்கள் கைகளில் தலா ஒரு குழந்தையைச் சுமந்தபடி கோயிலைச் சுற்றிவந்து, தூக்க நோ்ச்சை நிறைவேற்றப்பட்டது.

தூக்க நோ்ச்சை நிறைவடைந்த பின்னா், வில்லின் மூட்டில் குருதி தா்ப்பணத்துடன் இன்று விழா நிறைவடைந்தது.

-சக்தி பரமசிவன்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வெள்ளி 19 மா 2021